உங்கள் குழந்தைகளில் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம் ##### We will take care of your Kids
எமது பிரதேசத்தின் முன்னேற்றத்திலும் சிறார்களின் நலன்களிலும் அக்கறை கொண்ட அன்புள்ளங்கள் தமது பிறந்தநாள்களிலும் , திருமண நாள்களிலும் மற்றும் உறவுகளின் பிறந்தநாள்களிலும் நினைவுநாள்களிலும் போசாக்கான உணவினை இச் சிறார்களுக்கு வழங்குவதற்காக நிதி உதவியினை வழங்கி வருகிறார்கள்.

What we offer - எமது சிறப்புக்கள்
Dr.மொண்டசோரி அம்மையாரின் முன்பள்ளி கற்பித்தல் முறைமையை உள்வாங்கிய கலைத்திட்டம் கொண்ட எமது நிலையம் வடக்கில் முதன் முதல் உருவாக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு நிலையமாகும். அரசாங்க விடுமறை நாட்கள் தவிர்ந்த வாரத்தின் 5 வேலை நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நிலையம் செய்ற்படுகின்றது. ஒருவருடத்தில் மொத்தமாக 48 கிழமைகள் இயங்கி வருகின்றது.
எமது பாலர் நிலையத்தில் உள்ள வசதிகள்
1970இல் முன்பள்ளிச் செயற்பாட்டிற்காக பாலர்பகல் விடுதியுடன் இணைத்து முன்பள்ளிக் கூடம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலம் இப்பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கப்பட்டுவருகின்றது.
வசதிகள்
- காற்றோட்டமுள்ள ரம்மியமான சூழல் கொண்ட வகுப்பறைகள் மற்றும் மண்டபம்
- விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு முற்றம்
- சுத்தமான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள்
- கணினி,ஆங்கிலப்பேச்சு திறன்(Elocution) வகுப்புக்கள்
Our Curriculum - கலைத்திட்டம்
நீர்வேலி பாலர் பகல்விடுதியும் முன்பள்ளியும் ,மொன்டசோரி அம்மையாரின் முன்பள்ளி கற்பித்தல் முறைமையை முழுமையாக பின்பற்றி வருகின்றது. முன்பள்ளி செயற்பாடுகள் நிறைவுற்றதும் மாலை நேரச்செயற்பாடுகளை மழலைகளுக்கு வழங்கி வருகின்றது.
- காலை 07.30- 08.30 : பாலர்களை வரவேற்றல்
- காலை 8.30- 8.45 : காலைப்பிரார்த்தனை
- காலை 8.45- 09.00 : உடற்பயிற்சி
- காலை 09.00- 09.30 : இசைவும் அசைவும்
- காலை 9.30- 10.00 : இடைவேளை
- காலை 10.00- 12.00 : கற்றல் செயற்பாடுகள்
- மதியம் 12.00-12.05: :நிலைய கீதம்
- மதியம் 12.05- 12.45 :மதிய போசனம்
- பிற்பகல் 12.45- 2.00 :ஒய்வு (நித்திரை கொள்ளல்)
- பிற்பகல் 02.00- 2.30 :முகம் கழுவிக்கொள்ளல்
- பிற்பகல் 2.30- 3.30 :ஆங்கில பேச்சுக்கலை வகுப்பு , கணினி கற்றல்
- பிற்பகல் 3.30-4.00 :தொலைக்காட்சி பார்த்தல் ,விளையாட்டு
- பிற்பகல் 4.00-4.30 :வீடு செல்லல்
அனுமதி பெறுவது எப்படி - What About Admission?
2 தொடக்கம் 5 வயது வரையுள்ள கோப்பாய் பிரதேச பிள்ளைகள் ஒவ்வொருவருடமும் டிசம்பர் 20 தொடக்கம் 25 வரையுள்ள காலப்பகுதியில் அனுமதிக்கப்படுகின்றனர். அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப்பெற்று பூர்த்திசெய்து பிறப்பு அத்தாட்சிப்பத்திர பிரதியுடன் சமர்ப்பிக்க முடியும். அனுமதிக்கு எந்தவித நன்கொடையும் பெறப்படுவதில்லை. மிகவும் குறைந்த தவணைக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படுகின்றது.
Latest News
