நிலைய கீதம்
பாலர் பகல் விடுதி மற்றும் முன்பள்ளியின் நிலைய கீதம்
பல்லவி
பாலர் பகல்விடுதி – பலம் பெறவே
சால உழைத்திடுவோம் நாளுமே (பாலர்..)
அனுபல்லவி
ஞாலத்திற் பாலர் வளர்ந்திடவே – என்றும்
காலத்தைப் போக்கிடாமல் உழைத்திடுவோம் (பாலர்….)
சரணம்
பச்சை யிளஞ்சிறு பாலர்கள் உய்ந்திட
இச்சையொடு மிளிரும் எங்கழகம்
மெச்சு புகழோடு இச்சகம் போற்றும்
உச்ச மடைந்திடும் உயர்நிலையுள்ள (பாலர்…)
அறிவியற் கலையொடு ஆடல் பாடலும்
நெறிவளர் நிலைகளும் நிலவச் செய்திடும்
மேற்பார்வை யாளரும் மிகுபணியாளரும்
ஏற்ப நலம் பெற அணைத்திடு மெங்கள் (பாலர்…)