021 223 2120info@palarnilayam.lk Neervely South,Neervely,Jaffna
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

தொடர்புகளுக்கு

பாலர்பகல்விடுதியின் வளர்ச்சியில் அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளது.எமது  பிள்ளைகளுக்கு கணனிக்கல்வியானது கடந்த சில ஆண்டுகளிற்கு முன்னரே தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் பாலர்நிலையத்திற்கென இணையத்தளமும் இயக்கப்பட்டு வருகிறது .இது மீண்டும புதுப்பொலிவுடன் புதிய முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

www.palarnilayam.lk என்ற எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தி்ல் உங்கள் அன்பளிப்புக்கள் மற்றும் நிகழ்வுகளின் படங்களையும் பார்க்கமுடிவதுடன் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியான பதிவேற்றம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(E-mail) ஈமெயில் முகவரியாக neervelycreche@gmail.com அத்துடன் முகநூல் கணக்கும் (face book ) Neervely Creche என காணப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நிலையத்தின் நிலையான இலக்கம் 021 223 2120 உள்ளது. எனவே அனைவரும் பாலர்பகல்விடுதியுடன் நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்.

உணவு அனுசரணை வழங்கல்

நீர்வேலி பாலர்பகல்விடுதியும் முன்பள்ளியும் எமது பிரதேச சிறார்களின் அறிவு , ஆரோக்கியம் மற்றும் ஆளுமைவிருத்தியிலும் பண்பாடு , பாதுகாப்பு என்பவற்றிலும் கரிசணையுடன் பல தசாப்தங்களாக செயற்பட்டுவருகின்றமை யாவரும் அறிந்தது.

அறிவு , ஆரோக்கியம் , ஆளுமைவிருத்தி என்பவற்றிற்கு போசாக்கான உணவு சிறார்களுக்கு வழங்குதல் அவசியமாகும். எமது பாலர்பகல்விடுதி சமுதாய முன்னேற்றம் கருதி மிகக்குறைந்த கட்டணத்துடன் இவற்றினை நிறைவேற்றி வருகின்றது.

எமது பிரதேசத்தின் முன்னேற்றத்திலும் சிறார்களின் நலன்களிலும் அக்கறை கொண்ட அன்புள்ளங்கள் தமது பிறந்தநாள்களிலும் , திருமண நாள்களிலும் மற்றும் உறவுகளின் பிறந்தநாள்களிலும் நினைவுநாள்களிலும் போசாக்கான உணவினை இச் சிறார்களுக்கு வழங்குவதற்காக நிதி உதவியினை வழங்கி வருகிறார்கள்.

ஒரு நாளுக்கான உணவு அனுசரணைக்கு ஆகக்குறைந்த தொகையாக ரூபா எண்ணாயிரத்தினை (8000/=) பெற்றுவருகின்றோம். நிதி உதவியினை வழங்க விருப்பம் கொண்ட அன்புள்ளங்கள் எமது அலுவலகத்தில் நேரடியாக பணத்தினை செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது வங்கி மூலம் பணத்தினைச் செலுத்தவிரும்புவோர் கோப்பாய் மக்கள் வங்கி கிளையிலுள்ள எமது சேமிப்புக்கணக்கு இல 109-2-001-4-0067091 இற்கு வரவு வைத்து எமது தொலைபேசி இல 021 223 2120 அல்லது எமது மின்னஞ்சல் முகவரி neervelycreche@gmail.com மூலமாக எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.