பாலர்பகல்விடுதி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி
நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி (Exhibition) எதிர்வரும் 14.03.2018 புதன்கிழமை மு.ப 9.00 மணியளவில் பாலர்பகல்விடுதி மண்டபத்தில் நிலையத்தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகைதந்திருக்கும் திருமதி செல்வமணி இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். அனைவரையும் வருகை தந்து பாலர்களின் ஆக்கங்களை கண்டுகளிக்குமாறு அன்புடன் அழைப்பதாக பாலர்பகல்விடுதி முன்பள்ளிச் சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.